Global Missionary Society › About Us
Archbishop Jebaraj, in 1971, with a significant divine revelation, firmly stated that the Tirunelveli Diocese of the Indian Mission Society should not settle for its current growth and happiness.He further urged the Tirunelveli Diocese to embark on a mission of fervent evangelism through the biblical verse from Isaiah 54:2: 'Enlarge the place of your tent, let the curtains of your dwellings be stretched out; do not hold back; lengthen your cords, and strengthen your stakes.'

We firmly believe that this vision is the blueprint for our collective future. By actively preparing our communities and empowering every single individual, we are constructing a profound legacy of faith.
Through tireless efforts, education, and spiritual guidance, our society continues to manifest these ideals into tangible realities across numerous territories.
The members of the church wholeheartedly accepted the archbishop's call as a divine summons. As a result: Each congregation established mission stations in areas of North Tirunelveli where the name of Jesus was unknown.Each church council initiated outreach in parts of North Tamil Nadu where the kingdom of Christ had not yet taken root.


In 1972, the South Tirunelveli Church Council launched the Pennnagar Mission, centered in Pennnagar in Dharmapuri district. In 1975, the Tirunelveli Diocesan structure was reorganized, giving rise to three church councils: South Tirunelveli, South East, and East.These three church councils, united under the banner of the S.E.E.S. Missionary Movement, continued to excel in their work at Pennnagar.
SE.E.S. மிஷனெரி ஊழியத்தின் 25வது ஆண்டு விழா 1997 ஆம் ஆண்டு மே திங்கள் முதலாம் நாள் மெஞ்ஞானபுரம் தூய பவுலின் ஆலயத்தில் நடைபெறுவதை அறிந்து பேருவகைக் கொள்கிறேன்.
கர்த்தரின் ராஜ்ய திட்டத்தில் தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய சபைமன்றங்கள் இணைந்து, கரம் கோர்த்து செயல்படுவது திருச்சபை ஐக்கியத்திற்கு ஓர் ஆதாரமாகவே அமைந்துள்ளது என்று அறிந்து உளம் பூரிக்கிறேன்.
பென்னாகரத்தை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நற்செய்தி ஊழியம், இன்று A.பள்ளிப்பட்டி, A.K.மோட்டூர், வெங்கடசமுத்திரம், தோரணம்பதி, தாசர்குந்தி, பெரும்பாலை, வடகரை, சிந்தல்பாடி ஆகிய இடங்களில் விரிந்து, பரந்து செயலாற்றுவதை அறிந்து கடவுளைத் துதிக்கிறேன்.
மேலும் இந்த எல்லாப் பணித்தளங்களிலும் மிஷனெரிகள் குடும்பமாக நியமிக்கப்பட்டு ஊழியத்தில் ஈடுபட உற்சாகப்படுத்தப்படுகிறார்கள் என்பது இன்னமும் மகிழ்ச்சியை கூட்டுகிற செயலாகிறது.
வடகரையில் ஓர் ஆலயம், தோரணபதியில் 1997, ஏப்ரல் 19 ஆம் நாள் ஓர் ஆலயம். இவையெல்லாம் இறையரசில் கடவுள் நமக்குத் தந்த சிலாக்கியங்கள்.
இவ்வூழியத்தின் பலன்கள் பரலோகத்திலே மகிழ்ச்சியை நாளுக்கு நாள் ஏற்படுத்துவதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நாள் பெருக்கிக்கொண்டேயிருக்கின்றன என்பதனை விசுவாசக் கண்களால் காணும்போது, உள்ளம் பரவசமடைகிறது. இதுபோன்ற எத்தனைப் பகுதிகள் இன்றும் தமிழகத்தில் சுவிசேஷத்திற்காக காத்திருக்கின்றன என்பது இன்றைக்கு நமக்கு சவால் அல்லவா!
சிறந்த ஊழியர்களின் அர்ப்பணம் நமக்கு அறைகூவல் அன்றோ!
நாம் பெற்ற ஆத்துமாக்கள் நமது கண்களை விரிவடையச் செய்கிறதன்றோ!
ஏங்கி நிற்கும் மக்கள் கூட்டம் நமது தரிசனம் அன்றோ!
இக்காட்சிகள் நம்மைவிட்டு நீங்காதவைகளாய் இடம்பெற நம்மை அர்ப்பணித்து விடுவதுதான் இந்நாளின் பெரு மகிழ்ச்சியாகும்.
நமது பின் சந்ததியார் இவ்வூழியத்தில் ஆவல் கொள்ள திட்டம் வகுப்பதும், இவ்வூழியத்தில் ஊழியர்கள் யாவரும் இச்சபை மன்ற வாலிபர்களாக இடம் பெற ஏற்ற ஒழுங்குகள் செய்வதும் குறிக்கோளாக அமைவது இன்னாளில் பொருத்தமான அர்ப்பணிப்பாகும்.
"இதோ வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்."
— யோவான் 4:35கடவுளின் வழி நடத்துதல் உங்கள் பணிகளில் என்றும் நிலைத்திருப்பதாக.
SEES Missionary பணி அமைப்பு (பென்னகர ஊழியம்) தனது வெள்ளி விழாவை மே 1ம் தேதி கொண்டாட இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்; அச்சங்கத்தை வாழ்த்துகிறேன்.
முன்னாள் நெல்லை பேராயர் ஜெயராஜ் அத்தியட்சர் அவர்கள் திருநெல்வேலி திருச்சபை இந்திய மிஷினரி சங்கத்தின் வளர்ச்சி கண்டு திருப்தியோடும் மகிழ்ச்சியோடும் இருப்பது போதாது "உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடை செய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து" என்ற திருவசனத்தை திருநெல்வேலி சபைக்கு முன் வைத்து ஒவ்வொரு சேகரமும், சபை மன்றமும் தங்கள் எல்லைக்கு வெளியே ஒரு மிஷினரி தளத்தை ஏற்படுத்தி அவ்விடங்களுக்கு தங்கள் சேகரத்திலிருந்து மிஷினரிகளை அனுப்பவும், அப்பகுதிகளில் தீவிர நற்செய்தி பணி செய்து புதிய சபைகளை ஸ்தாபித்து ஆலயங்களை கட்டுவதற்கான அறைகூவலை சபைகளுக்கு முன் வைத்தார்கள்.
அதனை ஏற்று தென்திருநெல்வேலி சேகரங்கள் வட திருநெல்வேலியில் பல இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு செய்த ஊழியத்தின் பயனாய் பல சபைகள் உருவாகி, ஆலயங்களும் கட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து இந்த ஊழியம் நடைபெற்று வருகிறது. கர்த்தருக்கு ஸ்தோத்ரம்.
இந்த அறைகூவலை அன்றைய தென் திருநெல்வேலி சபை மன்றமும் ஏற்று தர்மபுரி மாவட்டத்தில் பெண்கள் பகுதியில் மிஷினரி ஊழியத்தை ஆரம்பித்தனர்.
1975ல் நம்முடைய பேராய அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட வேளையில் அன்றைய தென்திருநெல்வேலி சபை மன்றம் மூன்று சபை மன்றங்களாகப் பிரிக்கப்பட்டாலும், மூன்று சபை மன்றங்களும் இணைந்து தொடர்ந்து பென்னகர ஊழியத்தை செய்து வந்தன. இன்று அப்பணி SEES Missionary பணி என்று அழைக்கப்படுகிறது.
இப்பணியின் சிறப்பும் வளர்ச்சியும் பாராட்டத்தக்கது. அதன் ஆரம்ப காலம் முதல் அதன் அமைப்பாளராக இருந்து, பின்னர் ஓய்வு பெற்ற பின்னரும் 1995ம் ஆண்டு வரை (83 வயது வரை) இப்பணியை சிறப்பாக ஒழுங்குபடுத்தி, சேகரங்களை ஊக்குவித்து, பல மிஷனரிகள் அனுப்பப்படவும், பல இடங்களில் ஆலயங்கள் கட்டப்படவும் காரணமாக இருந்த கனம் சாலமோன் சீமோன் ஐயரவர்களின் பணி போற்றத்தக்கது.
தொடர்ந்து இவ்வூழியம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். பற்பல மட்டங்களிலும் பணி செய்து இம்மிஷனரி அமைப்பை கட்டி வளர்த்து வருகிற அனைத்து ஊழியர்களையும், தங்கள் ஜெபத்தாலும், பணத்தாலும், நல்லெண்ண ஒத்துழைப்பாலும் இப்பணியை தாங்கி வருகிற அனைத்து சபை மக்களையும் வாழ்த்துகிறேன்; பாராட்டுகிறேன்.
பூமியிலே மலைகளின் உச்சியில் விதைக்கப்பட்ட ஒரு படி தானியத்தின் விளைச்சலைக் கண்டு சமவெளி மக்கள் மகிழ்ச்சி அடைவது போல, சங்கத்தால் நடத்தப்படும் ஊழியமும் அதன் விளைவாக இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட திரளான மக்களின் மனமாற்றமும், அமைக்கப்படும் சபைகளும், கட்டப்படும் ஆலயங்களும் நம் அனைவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியைத் தருகின்றன. பரலோகத்திலும் தேவதூதர்கள் முன்பாக அதிக சந்தோஷம் உண்டாகிறது.
தொடர்ந்து அப்பணி சிறப்புடன் வளர்ந்து பெருக கர்த்தர் கிருபை செய்வாராக.
"சமாதானத்தை கூறி நற்காரியங்களை சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பை பிரசித்தப்படுத்தி, 'உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறார்' என்று சீயோனுக்கு சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் எத்தனை அழகானவையோ."
SEES Missionary சங்கமே, அது போன்றே உன் செயல்பாடும் அழகானவை; தேவனுக்கு மகிமையானவை.
"அற்பமான ஆரம்பநாளை யார் அசட்டை செய்யக் கூடும்."
நெல்லை பேராயம் தென்சபை மன்ற கூட்டம் 1971ல் பிப்ரவரி மாதம் கூடினபோது சிறப்புரை ஆற்றின மகா கனம் A.G. ஜெபராஜ் அத்தியக்ஷரவர்கள் நற்செய்தி பணிப்பற்றி பேசி, அந்த சபை மன்றத்தில் கிறிஸ்தவர்கள் உள்ள கிராமங்களை சிவப்பு வர்ணத்தாலும், கிறிஸ்தவரல்லாத கிராமங்களை கருப்பு வர்ணத்தாலும் குறியிட்டு, அந்த கிராமங்களுக்காக ஜெபிப்பது மட்டுமன்றி அவை கிறிஸ்துவண்டை வர உழைக்க வேண்டும் என்றும், வெளி மாவட்டங்களிலும் நமது சுவிசேஷ பணி தொடர வேண்டும் என்றும் ஊக்குவித்தார்கள்.
அதன் பயனாக வெளி மாவட்ட ஊழியம் செய்ய திட்டமிட்டு தர்மபுரி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்நாள் சபை மன்ற தலைவர் அருட்திரு. M.D. ராஜமணி ஐயரவர்களும், அருள்திரு. S. சாலோமோன் ஐயரவர்களும், பெத்தேல் திரு. P. சாமுவேல் அவர்கள் உதவியுடன் தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களை ஆய்வு செய்தனர்.
இறுதியில் பென்னகரத்தை மையமாக வைத்து 1972ல் ஊழியம் ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இது பென்னகர ஊழியம் என்று அழைக்கப்படுகிறது.
1975ஆம் ஆண்டு தென் சபை மன்றம் மூன்று சபை மன்றங்களாகப் பிரிக்கப்பட்டாலும், தென்கிழக்கு, கிழக்கு மற்றும் தெற்கு சபை மன்றங்கள் இணைந்து பென்னகர ஊழியத்தை தொடர்ந்து நடத்த தீர்மானிக்கப்பட்டது. கனம் சாலமோன் சைமன் ஐயரவர்களை கன்வீனராகக் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு ஊழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முதல் மிஷனெரி திரு. M. எட்வின் 1972ஆம் ஆண்டு நாசரேத் பரி. யோவான் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அனுப்பப்பட்டார். தியாக சிந்தையோடும் பெரியவர்கள் மற்றும் பிள்ளைகள் மத்தியிலும் சிறந்த ஊழியம் செய்தார். குன்றுகளுக்கிடையிலுள்ள கிராமங்களுக்கும் சென்று சுவிசேஷத்தை அறிவித்தார். பலர் ஜெபத்தின் மூலம் சுகம் பெற்றனர்.
1976ஆம் ஆண்டு பென்னகரத்தில் ஆலயத்திற்கான இடம் வாங்கப்பட்டது. ரூ.4000 செலவில் ஆலயம் கட்டப்பட்டு 24 ஜூன் 1977 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றைய தினம் ஓகனேக்கல் காவேரி ஆற்றில் 8 பேருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது.
1980ஆம் ஆண்டு ஆலய விரிவாக்கத்திற்காக 14 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 1981ஆம் ஆண்டு மிஷனெரி இல்லம் கட்டப்பட்டது. தொடர்ந்து பென்னகர சபை வளர்ச்சி பெற்று வந்தது.
1989ஆம் ஆண்டு பென்னகரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சபைகள், ஆலயம், மிஷனெரி இல்லம் மற்றும் நிலங்கள் ஆகியவை கோயம்புத்தூர் பேராயத்திற்கு ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டது. விசேஷ ஆராதனையின் போது நில ஆவணங்களும் ஆலய சாவியும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.
South East, East மற்றும் South ஆகிய மூன்று சபை மன்றங்களின் முதல் எழுத்துக்களை இணைத்து SEES Missionary என்ற பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஊழியம் SEES மிஷனெரி பணி என்று அழைக்கப்படுகிறது.
1984ஆம் ஆண்டு 30 பேருக்கு திருமுழுக்கு அளிக்கப்பட்டது. பின்னர் கட்டப்பட்ட ஆலயம் புயலால் சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து நெல்லை பேராயர் மற்றும் கோவை பேராயர் இணைந்து அந்த இடத்தைப் பார்வையிட்டு, ஓகனேக்கல் காவேரி ஆற்றில் 39 பேருக்கு திருமுழுக்கு அளித்தனர். இந்த ஊழியத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் அளித்த ஆதரவு குறிப்பிடத்தக்கதாகும்.
பென்னகரப் பணியின் வெள்ளிவிழா காணும் கர்த்தாவின் பிரியமான பிள்ளைகளுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
ஜெபவீரர் அருட்பெருந்திரு. A.G. ஜெயராஜ் பேராயரவர்களின் அற்புதப் படைப்புகளில் ஒன்று ஒவ்வொரு சபை மன்றமும் வெளி மாவட்டங்களில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து நற்செய்திப் பணியாற்றி ஆத்துமாக்களை ஆதாயம் செய்வது. அத்திட்டத்தில் உருவானதுதான் பென்னகரப் பணித்தளம்.
நெல்லைத் திருமண்டலத்தில் மூன்று சபை மன்றங்கள் இயங்கி வந்த காலத்தில், தெற்கு சபை மன்றத் தலைவராக அருட்திரு. ராஜமணி ஐயரவர்கள் செயலாற்றிய நாட்களில மிகவும் பின்னடைந்த நக்சலைட்டுகள் நிறைந்த பென்னகரத்தைப் பணித்தளமாகக் கொண்டு, கொங்கந்தான் பாறையைச் சேர்ந்த திரு. M. எட்வின் என்ற ஆன்மபாரம் கொண்ட இளைஞரை முதல் மிஷனெரியாக நியமித்தார்கள்.
அக்காலத்தில் நிலம் வாங்கப்பட்டு ஆலயம் கட்டப்பட்டு பென்னகரத்தில் முதல் மிஷனரி சபை உருவானது.
மறுமைக்குட்பட்ட அருட்திரு. S. சாலமோன் சைமன் ஐயரவர்கள் 1-4-1975 முதல் மூன்று சபை மன்றங்களின் கன்வீனராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றினர். அவர்களின் காலத்தில் ஏழு பணித்தளங்கள் உருவாக்கப்பட்டு, ஏழு மிஷனெரிமார்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் மூன்று ஆலயங்கள் கட்டப்பட்டன.
ஆறுமுகனேரி சேகர குருவாக இருந்த என்னை பென்னகரப் பணித்தளத்தைப் பார்வையிட அனுப்பியபோது, மிஷனெரி திரு. எட்வின் அவர்களின் முயற்சியால் ஆயத்தம் செய்யப்பட்ட 37 பேருக்கு ஞானஸ்நானம் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
முன்னாள் பேராயர் அருட்பெருந்திரு S. தானியேல் ஆபிரகாம் அவர்கள் பென்னகரப் பணி சிறக்க தொடர்ந்து ஊக்கம் அளித்தார்கள்.
இப்பொழுதுள்ள SEES சபை மன்ற மக்கள், IMS ஊழியத்தை ஆதரிப்பதைப் போலவே SEES மிஷினரி ஊழியத்தையும் மிகுந்த அன்புடனும் ஜெபத்துடனும் ஆதரித்து வருகின்றனர்.
சமீப காலங்களில் இரண்டு புதிய ஆலயங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தற்போது எட்டு மிஷனெரிமார்கள், அபிவிருத்தி ஊழியர் டேவிட் இராஜாசிங், கன்வீனர் J. இரத்தினம் மற்றும் பலர் இணைந்து இறையரசை விரிவுபடுத்த மகிழ்ச்சியுடன் உழைத்து வருகின்றனர்.
மூன்று சபை மன்றத் தலைவர்களும், 43 சேகர குருசகோதரர்களும் அளித்து வரும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. நமது அன்பு பேராயர் அருட்பெருந்திரு ஜேசன் தர்மராஜ் அவர்களும் தொடர்ந்து சிறந்த ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் வழங்கி இந்த ஊழியத்தை ஆதரித்து வருகின்றார்கள்.
இறைவன் இயேசுவுக்கே எல்லா கனமும் மகிமையும் துதியும் உண்டாவதாக.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
மணி பதினொன்று, நடுநிசி அமைதியில் ஊர் உறங்கிக் கொண்டிருந்தது. குடும்ப ஜெபம் முடிந்து மிஷனெரி உறங்கச் சென்றிருந்த நேரத்தில், “ஐயா! இயேசு ஐயா! எனக்கு உதவி செய்யுங்கள்” என்ற அழுகுரல் கேட்டது. வெளியே வந்த மிஷனெரியிடம் ஒருவர் வயிற்று வலியாலும் பயத்தாலும் கதறி ஜெபிக்குமாறு வேண்டினார்.
மிஷனெரி நீண்ட நேரம் ஜெபித்தார். அந்த மனிதனிடமிருந்து அசுத்த ஆவிகள் நீங்கி, பயமும் வலியும் மறைந்தது. விக்கிரகங்களுக்கு அலங்காரம் செய்வதை தொழிலாகக் கொண்டிருந்த அவர், இயேசுவை ஏற்றுக்கொண்டு தனது முழு குடும்பத்தோடு திருமுழுக்கு பெற்றார். அவரே தோரணபதி பணித்தளத்தின் முதற்கனியாக ஆனார்.
1993ஆம் ஆண்டு சகோ. சிரோன்மணி இப்பணிக்கு அனுப்பப்பட்டார். இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் ஆரம்பத்தில் வீடு கூட கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டவர் பல அற்புதங்களைச் செய்தார். நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிள்ளையில்லாதவர்கள் ஆகியோரின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டன. இதுவரை 87 பேர் ஞானஸ்நானம் பெற்றுள்ளனர்.
தோரணபதி திருச்சபை வளர்ச்சியடைந்து ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களில் தேவவார்த்தை அறிவிக்கப்படுகிறது. மக்கள் உற்சாகமாக ஆராதனைகளில் பங்கேற்கின்றனர்.
சகோ. சிரோன்மணி தம்பதியினர் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆலயத்திற்கு ஒலிபெருக்கி தேவை. தொடர்ந்து ஜெபிக்க வேண்டப்படுகிறது.
பச்சமலை பகுதியில் சுமார் 99 கிராமங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக பல மிஷனெரிகள் இங்கு பணியாற்றியிருந்தாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
1995ஆம் ஆண்டு இப்பணித்தளம் தொடங்கப்பட்டது. திரு. பால் ராமச்சந்திரன் குடும்பத்தினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஊழியம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் பல மூடநம்பிக்கைகளிலும் பழக்கவழக்கங்களிலும் இருந்தபோதிலும், தேவன் அவர்களின் ஊழியத்தின் மூலம் அற்புத மாற்றங்களை ஏற்படுத்தினார்.
நாராயணன் என்ற இந்து சகோதரர் இயேசுவை ஏற்றுக்கொண்டு ஜேம்ஸ் என்ற பெயரில் திருமுழுக்கு பெற்றார். மேலும் பலர் ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாக உள்ளனர்.
சுமார் 60 சிறுவர், சிறுமியர்களுக்கு வேதாகமப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இரவு நேரங்களில் முதியோர் கல்வியுடன் சுவிசேஷமும் அறிவிக்கப்படுகிறது.
இப்பணித்தளத்தில் ஆலயம் கட்டப்படவும், மேலும் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டப்படுகிறது.
தோரணபதி பணித்தளத்தில் சகோ. சிரோன்மணி அவர்கள் ஊழியம் செய்த காலத்திலிருந்தே A.K. மோட்டூர் பகுதியில் சுவிசேஷத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவருடைய முயற்சியால் சிலர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர்.
தோரணபதியிலிருந்து இப்பகுதி மிகவும் தொலைவில் இருந்ததால், தொடர்ந்து ஊழியம் செய்வது சிரமமாக இருந்தது. அதனால் டேனியல் தம்பதியினர் இப்பகுதியை மையமாகக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களில் சுவிசேஷ ஊழியத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தாலும், சுவிசேஷத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆராதனைக் குழுவும் செயல்பட்டு வருகிறது.
சகோதரருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கும் ஊழியத்திற்கும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டப்படுகிறது.
1993ஆம் ஆண்டு ஒரு காலை நேரத்தில், “இயேசு கூட வருவார்” என்ற பாடலைப் பாடிக்கொண்டே மிஷனெரி செல்வராஜ் கிராமத்திற்குள் நுழைந்தார். பாடலைக் கேட்டு மக்கள் திரண்டு வந்து, அவர் அறிவித்த சுவிசேஷத்தை கவனமாகக் கேட்டனர்.
அவரது ஊழியத்தின் மூலம் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். மக்கள் அன்போடு அவரை “இயேசன்னா” என்று அழைக்கத் தொடங்கினர். திருச்சபை வேரூன்றி வேகமாக வளர்ச்சி பெற்றது.
வடகரை வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி. திப்புசுல்தான் காலம் முதல் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் இடமாகும். இப்பகுதியில் சுவிசேஷ விதை நல்ல நிலத்தில் விழுந்த விதையைப் போல பலன் கொடுத்து, மக்கள் கூட்டமாக இயேசுவை ஏற்றுக்கொண்டனர்.
"சுவிசேஷகரின் பாதங்கள் மலையின் மேல் அழகாயுள்ளது"
இந்த வசனத்தின் நிழல் பென்னாகர பகுதியில் உள்ள மிஷனெரி பணித்தளங்களில் இன்றும் பிரதிபலிப்பதை காண்கிறோம். காரணம், சாலமோன் சைமன் ஐயரவர்கள் தமது வயதான காலத்திலும் தியாகத்துடனும், ஜெபத்துடனும், கர்த்தரின் திட்டப்படி செயல்பட்டதே ஆகும்.
அவர்களோடு கூட பணியாற்றும் சிலாக்கியம் எனக்கும் கிடைத்தது. ஊழியத்தின் பாதையில் சந்தித்த சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் படைக்க விரும்புகிறேன்.
ஊழியத்தின் பாதையில் முதுமை வயது ஒரு தடையில்லை என்பதை சாதனையில் நிகழ்த்திக் காட்டியவர் நமது ஐயா அவர்கள்.
தாசர்குந்தி என்ற பணித்தளத்திற்கு ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வாகனத்தில் செல்ல முடியும். அதன் பின்னர் பாதையற்ற, கரடு முரடான, முட்கள் நிறைந்த மலையின் வழியாக நடந்து சென்று குன்றின் உச்சியில் உள்ள ஆலயத்தை அடைய வேண்டும்.
வருடாந்திர ஊழியத்தின் போது இளைஞர்கள்கூட களைப்படைந்து சோர்ந்து போவார்கள். ஆனால் ஐயா அவர்கள் மோசேயைப் போல உறுதியான உள்ளத்தோடு தளராமல் நடந்து செல்வது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அவரைக் கண்டு பின்வாங்கியவர்களும் உற்சாகம் அடைந்து அவரைத் தொடர்ந்து நடந்து சென்றனர்.
ஒரு சமயம் தாசர்குந்தி ஆலயத்தில் வீசிய பலத்த காற்றினால் ஆலயத்தின் கூரை தூக்கி எறியப்பட்டது. அந்த நேரத்திலும் மனம் தளராமல் ஜெபித்து, மீண்டும் அந்த ஆலய கூரையைப் புதுப்பித்து மகிமைமிக்க ஆலயமாக உருவாக்கினார்.
பெரும்பாலை என்ற கிராமத்தில் இயேசுவின் நாமத்தை அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவித்து வளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தோம்.
ஆனால் அங்கு இருந்த ஒரு கிறிஸ்தவ ஆசிரியரின் தவறான வாழ்க்கையால் சில மக்கள் கிறிஸ்தவர்களைப் பற்றி தவறான எண்ணம் கொண்டனர்.
இதனால் எங்கள் ஊழியத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. நிந்தையான வார்த்தைகளை கேட்கவும், இசைக்கருவிகள் உடைக்கப்படவும், ஊரை விட்டு வெளியேற்றப்படும் நிலையும் ஏற்பட்டது.
ஆனால் ஐயா அவர்கள் மனம் தளரவில்லை. அந்த ஊர் மக்களை தனித்தனியாக சந்தித்து, தவறான மனிதர்களை நோக்காமல், சிலுவையில் தம்மை அர்ப்பணித்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இதன் மூலம் மீண்டும் அந்த கிராமத்தில் ஊழியம் தொடர வழி ஏற்படுத்தப்பட்டது.
ஊழியங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் சில படித்த கிறிஸ்தவர்களால் நெருக்கங்களும் ஏற்பட்டன. ஊழியத்தின் பெயரை பயன்படுத்தி வேலை வாங்கித் தருவதாகவும், பயிற்சிக்கு இடம் பெற்றுத் தருவதாகவும் கூறி மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றினர்.
இதனால் ஊழியத்தின் பெயருக்கு நிந்தை ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதனை அறிந்த ஐயா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து, விசாரித்து, முடிந்தவரை அவர்கள் இழந்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுத்தார்.
மேலும் விசுவாசிகளுக்கும் மிஷனெரிகளுக்கும் சரியான அறிவுரைகளை வழங்கி, வஞ்சிக்கிறவர்கள் சபையில் ஊடுருவாமல் பாதுகாத்தார்.
படித்த பிள்ளைகளின் உயர்கல்விக்கும் தொழிற்கல்விக்கும் உதவிகளை செய்தார்.
ஐயரவர்களின் எண்ணங்களும் ஏக்கங்களும் மரண படுக்கை வரை ஊழியத்தைப் பற்றியே இருந்தன. தமது பலவீனங்களையோ, முதுமையையோ பார்க்காமல் கர்த்தரையே நோக்கிப் பார்த்தார்.
மிஷனெரி பணித்தளங்களில் அவருடைய வேகமான நடை இன்னும் நம் கண்கள் முன் நிற்கிறது.
அந்த ஊழிய வளர்ச்சியில் பங்கேற்ற நாம் தொடர்ந்து ஓடுவோம், உழைப்போம், ஆண்டவரின் நாமத்திற்கு மகிமையை சேர்ப்போம்.
அன்பு உள்ளங்களே! ஆழ்கடல் முத்துக்களே!!
ஒரு நாள் மிஷனெரி ஒருவர் தன் பணித்தள மக்களுக்கு செய்தி கொடுத்தார். தன் கரங்களிலிருந்த கோர சிலுவைக் காட்சியின் படம் ஒன்றைக் காட்டினார். இயேசு சிலுவையில் தொங்கும் படம் அது.
பின்பு மக்களைப் பார்த்து கேட்டார்: "நீங்கள் இப்படத்தில் என்ன காண்கிறீர்கள்?"
அனைவரும் ஒரே பதிலை கூறினார்கள்: "உருக்குலைந்த இயேசுவின் உடலைக் காண்கிறோம்."
மிஷனெரி சிரித்தார். ஒரு விசுவாசி கேட்டார்: "நீங்கள் என்ன காண்கிறீர்கள்?"
மிஷனெரி புன்னகையுடன் பதிலளித்தார்: "நான் என் ஆண்டவரின் உருகும் உள்ளத்தைக் காண்கிறேன்."
பின்னர் சிலுவைப் படத்தில் இருந்த சிவப்பு நிறத்தை காட்டி: "இதில் என்ன காண்கிறீர்கள்?" என்று கேட்டார்.
ஒரு ஓவியன்: "அந்தி வானத்தின் சிவப்பைக் காண்கிறேன்" என்றான்.
ஒரு கவிஞன்: "அதிகாலை சூரியனின் அழகைக் காண்கிறேன்" என்றான்.
ஒரு குடிப்பிரியன்: "உயர்ந்தரக மதுவின் வண்ணம் நினைவுக்கு வருகிறது" என்றான்.
மிஷனெரி சொன்னார்: "இந்த சிவப்பு வண்ணத்தை பார்க்கும்போது விசுவாசிகளின் கலங்கிய கண்களைக் காண்கிறேன்."
ஆம்! கால்டுவெல், மர்காஷியஸ், ஜான்தாமஸ், நார்மன், போல், ரேக்லண்ட் போன்ற மிஷனெரிகள் உருகும் உள்ளங்களோடு பணித்தள மக்களின் கலங்கிய கண்களைக் கண்டார்கள். தங்களைத் தியாகத் தீயில் அர்ப்பணித்தார்கள். பணித்தளங்கள் உருவாயின. சுவிசேஷம் பரவியது.
அந்த வரிசையில் வந்தவர் தான்: "SEES" தந்தை சாலமோன் சைமன்.
உயிர் போகும் வரை உழைத்தார். வயதில் முதிர்ச்சி, உடலில் தளர்ச்சி, ஆனால்... நிற்கவில்லை முயற்சி.
பணித்தள விஷயமாக அவரைத் தேடி யார் வந்தாலும் அன்போடு வரவேற்பார்.
தளர்ந்த நடைபோட்டு, சிரித்த முகத்துடன் வந்து, கையில் கொண்டுவந்ததை கொடுத்து, பின்னர் பணித்தள செய்திகளை பகிர்ந்து கொள்வார்.
வாரம் ஒருமுறை பணித்தள ஊழியர்களை சந்திக்க வேண்டும் என்பது அவரது கட்டளை.
சந்தித்த ஒவ்வொரு முறையும் நான் கண்டது: அன்பு! அன்பு!! அளப்பரிய அன்பு!!!
தன்னால் இயன்றவரை பணித்தளங்களுக்கு சென்று ஊழியர்களைப் பாராட்டி, விசுவாசிகளை ஊக்குவித்தார்.
14 ஆண்டுகள் அவருடைய தொடர்பால் தொடப்பட்டவர்களில் ஒருவனாக எனக்கும் பங்கு உண்டு.
சுவிசேஷத்தில் ஒப்பீரின் தங்கம் போலவும், கிம்பர்லி வைரம் போலவும் ஜொலித்தார். சால்றிமோர் மலர் போல மணம் தந்தார். ஆழ்கடல் முத்துப்போல், தன்மணம் மாறாத தமிழ்போல் இனித்தார்.
பலரை கவர்ந்தார். உழைத்தார். விழுந்து அடிபட்டு படுக்கையில் இருந்தபோதும் பணித்தளமே அவரது மூச்சாக இருந்தது. மரணம் அவரை மேற்கொள்ளவில்லை. உயிர்த்தெழுதலின் நித்தியத்திற்கு உயர்ந்தார்.
ஓ! தேனுண்ணும் வண்டுகளே! வானத்துப் பறவைகளே! வனத்து வாழ் உயிரினங்களே! விண்மீன்களே!
மிஷனெரி சாலமோன் சைமனைத் தேடுகிறீர்களோ? அவர் இங்கே இல்லை. வானத்தை நோக்கிப் பாருங்கள்.
பரமபிதாவின் மடியிலே, தேவதூதர்கள் வடிவிலே ஓர் உருவைக் காண்கிறீர்களா?
அவர்தான்: பென்னாகரப் பெரியவர் "SEES" அமைப்பின் தந்தை சாலமோன் சைமன்.
(கவிஞர் அருள்திரு. ஞா. இராசாமணி, பண்டாரஞ்செட்டிவிளை)
காலமோ எழுபத்திரெண்டில் காரட் பேராயர் கோன்!
சாலமோன் சைமன் ஆயர் ஞாலமோ புகழும் வண்ணம்...
(தொடரும் கவிதைப் பகுதிகள் அடுத்த ஸ்லைடில் தொடரலாம்.)
மேலும் சான்றிதழ்கள் விரைவில்…
More letters & testimonials coming soon.
The Tuticorin-Nazareth Diocese was newly formed in October 2003. The decision was made to persist in conducting the S.E.E.S. mission as a diocesan Missionary Ministry, involving all congregations collectively.Consequently, on June 28, 2005, the S.E.E.S. Missionary Movement transformed into the 'Global Missionary Society' (GMS), operating with a renewed vision under God's grace.

"Go, therefore, and make disciples of all nations, baptizing them in the name of the Father, and of the Son, and of the Holy Spirit, teaching them to observe all that I have commanded you. " — Matthew 28:19-20